வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பேடிஎம் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் பங்குகள் 2 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன.
இன்றைய (ஆக.5) வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச்சந்தையில் பேடிஎம் (ஒன் 97 கம்யூனிகேசன்) நிறுவனத்தின் பங்கு 2.04 சதவீதம் குறைந்து ரூ.793.05 ஆக வர்த்தகமாகியது. இதற்கு செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமென கூறப்படுகிறது. பேடிஎம் செயலியை பயன்படுத்த முடியாமல், பயனர்கள் பலர் கடும் அவதிக்குள்ளாகினர்.
இது தொடர்பாக பேடிஎம் நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
'முன்னெப்போதும் இல்லாத வெளிப்புற நெட்வொர்க் சிக்கல்கள் காரணமாக இன்று காலை பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் தொழில்நுட்ப குழுவின் விரைவான நடவடிக்கைகளுக்கு நன்றி, குறுகிய காலத்தில் மீண்டும் திரும்ப முடிந்தது. எங்கள் வர்த்தகம் மற்றும் எஃப் & ஓ பயனர்களில் சிலர் தங்கள் வர்த்தகம் மற்றும் பதவிகளில் உண்மையான சிக்கல்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்'
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()
|
பேடிஎம் விளக்கத்திற்கு பிறகும், பல பயனர்கள் தங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லை என்று புகார் கூறியுள்ளனர்.மேலும் பயனர்கள் தங்களது டிரேடு மற்றும் நிலைகள் குறித்து விரிவான தகவல்களை வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளது. பயனர்கள் உண்மையான டிரேடு நிலை குறித்து விரைந்து மின்னஞ்சலில் அனுப்புங்கள். நாங்கள் மதிப்பீடு செய்கிறோம். எவ்வளவு விரிவாகக் கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவு எளிதாகவும் வேகமாகவும் தீர்வு அளிக்கப்படும் என எனவும் உறுதியளித்துள்ளது.