பயனர் கணக்கு விவரங்கள் குறித்து கேட்டதற்கு அதன் மதிப்பை சிதைக்கும் வகையில், மாதக்கணக்கில் டிவிட்டர் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியதாக எலான் மஸ்க் புகார் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டிவிட்டரை, ரூ.3.34
லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மொத்த டிவிட்டர் கணக்குகளில் 5 சதவீதம் மட்டுமே போலி கணக்குகள் என டிவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் உண்மையான விவரங்களை தெரிவிக்காததால், டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தார். இதனை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை அக்டோபரில் 5 நாட்கள் நடைபெறுமென நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் டெலாவேர் நீதிமன்றத்தில் ஒப்பந்தத்தை கைவிடுவதற்கான
மஸ்க்கின் வாதங்கள் மூடி முத்திரையிடப்படு தாக்கல் செய்யப்பட்டன. அதில், மஸ்க் தரப்பு,
டிவிட்டர் முதலீட்டாளர்களையும் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை
ஆணையத்தையும் தவறாக வழிநடத்தியது. மேலும் டிவிட்டர் அதன் மோசடிகள் வெளிவராமல் தடுக்கும் வகையில், அவநம்பிக்கையான முயற்சியில் தகவல்கள் தருவதை நிறுத்தியது 'என்று
ப்ளூம்பெர்க் தனது செய்தியில் கூறியுள்ளது.
![]()
|
டிவிட்டர் நிறுவனம் சார்பில் தாக்கலான 127 பக்க அறிக்கையில், 'மஸ்கின் குற்றச்சாட்டு
மக்களை ஏமாற்றும் முயற்சி. நம்பமுடியாதது மற்றும் உண்மைக்கு முரணானது. தனது சொந்த
சொத்து மதிப்பு சரிந்த நிலையில், பங்குச் சந்தையில் ஒப்பந்தம் கவர்ச்சியான ஒன்றாக இல்லை
என்று ஒரு இணைப்பு ஒப்பந்தத்தில் இருந்து தப்பிக்க ஒரு கதையை உருவாக்கினார்' என
கூறியுள்ளது.
மேலும் மஸ்க் தனது பதிலறிக்கையில், தீவிர டிவிட்டர் பயனர் கருத்து சுதந்திரம் மற்றும்
வெளிப்படையான விவாதத்தில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். மேலும் உலகின் கருத்து மையமாக டிவிட்டரின் பங்கைப் பாராட்டுகிறார். ஆனால் போலி கணக்குகள் டிவிட்டரில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அவற்றை அடையாளம் காண நிறுவனம் போதுமான அளவு முயற்சி செய்யவில்லை.
![]()
|
டிவிட்டரின் அளித்த வருவாய் தரக்கூடிய ஆக்டிவ் பயனர்களின் உண்மையான எண்ணிக்கை
அல்லது டிவிட்டர் முன்னிலைப்படுத்திய 238 மில்லியனை விட 65 மில்லியன் குறைவாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. மஸ்க்கின் கூற்றுப்படி, நிறுவனத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான விளம்பரத்தை எத்தனை பயனர்கள் பார்க்கிறார்கள் என்பதையும் ட்விட்டர் தவறாகக் குறிப்பிடுகிறது. மதிப்பீட்டின்படி, 16 மில்லியனுக்கும் குறைவான பயனர்கள் பெரும்பான்மையான விளம்பரங்களைப் பார்க்கிறார்கள், மேலும் அவை மட்டுமே வருவாய் தரக்கூடியவை எனக் கணக்கிடப்பட வேண்டும்.
டிவிட்டர் ஏற்கனவே கூறியப்படி, போதிய கால அவகாசத்திற்குள் தகவல்களை அளிக்கவில்லை நீண்ட காலமாக எழுச்சியில் இருந்த நிலையில் சரிய துவங்கி உள்ளதால், ,அவை வெளியேறி வருகின்றன. மஸ்க் தரப்பு கோரிய தகவல்களை அளித்தால், முழுமையாக அம்பலப்பட்டு விடுவோம் என டிவிட்டர் நிறுவனத்துக்கு தெரியுமென கூறியுள்ளது. .