வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி :உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையும் ராமர் கோவிலுக்கான கருவறை கட்டுமானப் பணிகள் கடந்த ஜூன் மாதம் முறைப்படி துவங்கின. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து, இந்தப் பணிகளை துவக்கி வைத்தார்.
வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், கோவிலை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஹிந்து கடவுள் ராமருக்கான கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 2020 ஆகஸ்டில் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதையடுத்து, முதல்கட்டமாக அடித்தளம் அமைக்கும் பணி துவங்கியது.
![]()
|
திட்டமிட்டபடி இந்தப் பணி முடிந்ததை தொடர்ந்து, கருவறை உட்பட கோவில் அமைக்கும் பணியை கடந்த ஜூன் மாதம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டு, துவக்கி வைக்கப்பட்டது.தற்போது 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முதல் தளம் முழுமையாக நிறைவுவடையும் எனவும் அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.