பராமரிப்பு இல்லாத பாலம்| Dinamalar

பராமரிப்பு இல்லாத பாலம்

Added : ஆக 05, 2022 | |
பொன்னேரி:ஓடை கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலம் முழுதும் சேதம் அடைந்து பராமரிப்பு இன்றி உள்ளது.பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை கிராமத்தில் இருந்து, உப்பளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஓடை கால்வாயின் குறுக்கே சிறுபாலம் அமைந்து உள்ளது.மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஏருசிவன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள், பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று
பராமரிப்பு இல்லாத பாலம்

பொன்னேரி:ஓடை கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலம் முழுதும் சேதம் அடைந்து பராமரிப்பு இன்றி உள்ளது.

பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை கிராமத்தில் இருந்து, உப்பளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஓடை கால்வாயின் குறுக்கே சிறுபாலம் அமைந்து உள்ளது.மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஏருசிவன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள், பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர்.

இந்த பாலம் உரிய பராமரிப்பு இல்லாததால், கான்கிரீட் சுவர்களில் உள்ள சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருகிறது. வாகனங்கள், கிராமவாசிகள் பயணிக்கும் கான்கிரீட் தளத்தின் மீது, கற்கள் பெயர்ந்து வருகிறது.பக்கவாட்டு பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. பாலம் பராமரிக்கப்படாததால், அதன் உறுதிதன்மையும் கேள்விக்குறியாகி வருகிறது.அத்தியாவசிய தேவைகளுக்காக மேற்கண்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வரும் நிலையில், உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X