2 வன உயிரின பூங்காபுதிதாக அமைக்க முடிவு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தில், புதிதாக இரண்டு வன உயிரின சரணாலயங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க, 10 கோடி ரூபாய் விடுவிக்கப்பட உள்ளது.தமிழகத்தில், 15 இடங்களில் வன உயிரின சரணாலயங்கள், 16 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. தற்போது, திண்டுக்கல், கரூர் மாவட்ட வனப்பகுதிகளை ஒருங்கிணைத்து, தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்

சென்னை:தமிழகத்தில், புதிதாக இரண்டு வன உயிரின சரணாலயங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க, 10 கோடி ரூபாய் விடுவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், 15 இடங்களில் வன உயிரின சரணாலயங்கள், 16 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. தற்போது, திண்டுக்கல், கரூர் மாவட்ட வனப்பகுதிகளை ஒருங்கிணைத்து, தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்கப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக் கோட்டத்தில், அஞ்செட்டி கிராமத்தில், காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அமைக்கவும், தமிழக அரசு, கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.இந்த இரண்டு வன உயிரின சரணாலயங்கள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தலா 5 கோடி ரூபாய் என, மொத்தம் 10 கோடி ரூபாய் நிதியை அரசிடம் பெற, வனத்துறை முயற்சி மேற்கொண்டு உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X