அறநிலையத்துறைக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு:உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரை:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டதால், அறநிலையத்துறை கமிஷனருக்கு எதிரான அவமதிப்பு வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. 'டெண்டர்' உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சென்னை மயிலாப்பூர் ரமேஷ், சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகம் மற்றும் அதன்

மதுரை:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டதால், அறநிலையத்துறை கமிஷனருக்கு எதிரான அவமதிப்பு வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.


'டெண்டர்'


உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சென்னை மயிலாப்பூர் ரமேஷ், சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் வளாகம் மற்றும் அதன் உபகோவில்களை பராமரிக்க ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்தும் 'டெண்டர்' அறிவிப்பை, கோவில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் வெளியிட்டார்.
இதில் விதிகளை பின்பற்றவில்லை.அறங்காவலர் குழு தான் நிதி சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள முடியும். டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இதை 2020ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'தக்கார் டெண்டர் அறிவிப்பு வெளியிட முடியாது; அதை ரத்து செய்கிறேன்.
பழநி கோவிலுக்கு அறங்காவலர் குழுவை அமைப்பதை உறுதி செய்ய மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.அதன் பின் மனுதாரர் ரமேஷ், 'தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றாததால் அறநிலையத்துறை கமிஷனர், செயலர், பழநி கோவில் இணை கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார்.


அரசாணைப்படி


அதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''ஜூலை 25ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப் படி அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு உள்ளது; வழக்கு முடிக்கப்படுகிறது,'' என உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X