'பார்' ஆக மாறிய பயணியர் நிழற்குடை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஸ்ரீதேவிக்குப்பம்:ஸ்ரீதேவிக்குப்பம் கிராமத்தில், பராமரிப்பில்லாத நிழற்குடை, மதுக்கூடமாக மாறி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது ஏகாட்டூர் ஊராட்சி. திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையோரம் கடம்பத்துார் காவல் நிலையம் அருகே இந்த ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவிக்குப்பம் பகுதியில் பயணியர் நிழற்குடை
'பார்' ஆக மாறிய பயணியர் நிழற்குடை

ஸ்ரீதேவிக்குப்பம்:ஸ்ரீதேவிக்குப்பம் கிராமத்தில், பராமரிப்பில்லாத நிழற்குடை, மதுக்கூடமாக மாறி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது ஏகாட்டூர் ஊராட்சி. திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையோரம் கடம்பத்துார் காவல் நிலையம் அருகே இந்த ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவிக்குப்பம் பகுதியில் பயணியர் நிழற்குடை உள்ளது.

இந்த நிழற்குடையை பயன்படுத்தி பொதுமக்கள், கடம்பத்துார், பேரம்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மார்க்கமாக சென்று வருகின்றனர்.இந்த நிழற்குடை முறையான பராமரிப்பு இல்லாததால் , 'குடி'மகன்கள் மது அருந்தும் 'பார்' ஆக மாறியுள்ளது, இதனால் பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், அருகிலேயே காவல் நிலையம் இருந்தும், நிழற்குடையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் பராமரிப்பில்லாத நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X