தந்தூரி சிக்கனுக்கு 'மயோனைஸ்'தராததால் ஹோட்டலில் தகராறு: அடாவடி ஊழியர்கள் 8 பேர் கைது

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஹோட்டலில் தந்துாரி சிக்கனுக்கு 'மயோனைஸ்' கேட்ட பிரச்னையில், வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபட்ட ஊழியர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.அசைவ உணவகம்திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே, அசைவ உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில், ஊருடையான் குடியிருப்பைச் சேர்ந்த

திருநெல்வேலி:திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஹோட்டலில் தந்துாரி சிக்கனுக்கு 'மயோனைஸ்' கேட்ட பிரச்னையில், வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபட்ட ஊழியர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


அசைவ உணவகம்


திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே, அசைவ உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில், ஊருடையான் குடியிருப்பைச் சேர்ந்த சிவபெருமாள், மணிகண்டன் ஆகியோர் தந்துாரி சிக்கன் சாப்பிட்டனர்.அதற்கு பக்க உணவாக, முட்டை வெள்ளை கருவில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸ் கேட்டனர். ஓட்டல் சர்வர் தர மறுத்தார். இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.


'வீடியோ'


உடன், மற்ற ஊழியர்களும் சேர்ந்து இருவரையும் கட்டைகள், பாத்திரங்களால் தாக்கினர். தாக்கப்படும் வீடியோ, 'வைரல்' ஆனது.சிவபெருமாள் புகாரின்படி, மேலப்பாளையம் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 26 முதல் 49 வயது வரையிலான ஹோட்டல் ஊழியர் களை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X