போதை வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
வானுார்:வானுார் அருகே மின் கம்பத்தில் ஏறுவதில் ஏற்பட்ட போட்டியில், மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தார்.புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு அடுத்த கரசூர் புது காலனியைச் சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார், 23; பெயின்டர்.இவர், இரு தினங்களுக்கு முன் இரவு, நண்பர் ராகுல் என்பவருடன், விழுப்புரம் மாவட்டம், கடப்பேரிக்குப்பம் சுடுகாடு அருகே மது அருந்தினார். அப்போது, அங்கிருந்த
போதை வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி

வானுார்:வானுார் அருகே மின் கம்பத்தில் ஏறுவதில் ஏற்பட்ட போட்டியில், மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தார்
.புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு அடுத்த கரசூர் புது காலனியைச் சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார், 23; பெயின்டர்.இவர், இரு தினங்களுக்கு முன் இரவு, நண்பர் ராகுல் என்பவருடன், விழுப்புரம் மாவட்டம், கடப்பேரிக்குப்பம் சுடுகாடு அருகே மது அருந்தினார். அப்போது, அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
அருண்குமார், மின் கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி எறியப்பட்டார். தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, வானுார் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X