சாலையில் தேங்கும் மழை நீர்வாகன ஓட்டிகள் தவிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பொன்னேரி:நகராட்சி சாலையில் சிறு மழை பெய்தாலும், தண்ணீர் குளம்போல் தேங்குவதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட புதிய தேரடி தெருவில் மழை நீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது. சிறு மழை பொழிந்தாலும், சாலை முழுதும் தண்ணீர் நிரம்பி குளம்போல் மாறுகிறது. தேங்கும் மழை நீரில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து பெரும்
சாலையில் தேங்கும் மழை நீர்வாகன ஓட்டிகள் தவிப்பு

பொன்னேரி:நகராட்சி சாலையில் சிறு மழை பெய்தாலும், தண்ணீர் குளம்போல் தேங்குவதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட புதிய தேரடி தெருவில் மழை நீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது. சிறு மழை பொழிந்தாலும், சாலை முழுதும் தண்ணீர் நிரம்பி குளம்போல் மாறுகிறது. தேங்கும் மழை நீரில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர்.மேலும், இந்த சாலையில், பாதாள சாக்கடை திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காங்கீரிட் சாலைகள் வெட்டி எடுக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.

இந்த சாலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த நிலையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. ஆங்காங்கே கட்டப்பட்ட கழிவு நீர் தொட்டிகள் சாலையின் மட்டத்தை விட உயரமாக இருக்கிறது. சாலையில் மழை நீர் தேங்கும்போது, எங்கு பள்ளம் உள்ளது, எங்கு கழிவு நீர் தொட்டி மூடிகள் உள்ளன என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி தடுமாறுகின்றனர்.

மேற்கண்ட சாலையில் மழை நீர் சீராக வெளியேறுவதற்கும், சாலை பள்ளங்களை சீரமைக்கவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X