முதியவர் கொலை வழக்கு தந்தை, மகனுக்கு 'ஆயுள்'

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கோவை:முதியவர் கொலை வழக்கில், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை தனிக்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகேயுள்ள கல்லயங்குட்டையில் வசித்து வந்தவர் பழனிச்சாமி, 72. அதே பகுதியிலுள்ள அக்ரஹாரசாமகுளத்தில் புதிதாக வீடு கட்டி வந்தார். அருகில், ராமசாமி, 80 என்பவர் குடியிருந்து, பன்றி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் வீடு கட்டும்

கோவை:முதியவர் கொலை வழக்கில், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை தனிக்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகேயுள்ள கல்லயங்குட்டையில் வசித்து வந்தவர் பழனிச்சாமி, 72. அதே பகுதியிலுள்ள அக்ரஹாரசாமகுளத்தில் புதிதாக வீடு கட்டி வந்தார். அருகில், ராமசாமி, 80 என்பவர் குடியிருந்து, பன்றி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் வீடு கட்டும் இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், கட்டுமான பொருட்களை, ராமசாமி கடை அருகில் பழனிச்சாமி கொட்டி வைத்திருந்தார். இதனால், 2017 நவ., 12ல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ராமசாமி, இவரது மகன் ஏசுகுமார், 35, ஆகியோர், பழனிச்சாமியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
கோவில்பாளையம் போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்து, கோவை தனிக் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட ராமசாமி, ஏசுகுமார் ஆகியோருக்கு ஆயுள் சிறை, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X