இந்தியன் வங்கி சார்பில் மாணவருக்கு நல உதவி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:இந்தியன் வங்கி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.இந்தியன் வங்கியின், 116வது நிறுவன நாள் விழா, பொதட்டூர்பேட்டை அடுத்த பாண்டரவேடு கிராமத்தில் நேற்று நடந்தது. இந்தியன் வங்கி மண்டல மேலாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், பொதட்டூர்பேட்டை கிளை மேலாளர் நதியா முன்னிலை வகித்தனர்.ஊராட்சி

திருவள்ளூர்:இந்தியன் வங்கி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

இந்தியன் வங்கியின், 116வது நிறுவன நாள் விழா, பொதட்டூர்பேட்டை அடுத்த பாண்டரவேடு கிராமத்தில் நேற்று நடந்தது. இந்தியன் வங்கி மண்டல மேலாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், பொதட்டூர்பேட்டை கிளை மேலாளர் நதியா முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு, 116 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருள் மற்றும் குடை வழங்கப்பட்டது.மேலும், கால்நடை பராமரிப்பு துறையுடன் இணைந்து, கேசவராஜகுப்பம் கிராமத்தில், இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், 597 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், பாண்டரவேடு ஊராட்சி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜன், கால்நடை மருத்துவர் பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X