தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கச்சூர் கிராமத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம் மற்றும் ராமசந்திரா பல்கலைக்கழக ஊட்டசத்துவியல் துறை சார்பில் உலக தாய்ப்பால் தின விழா கொண்டாடப் பட்டது.பூண்டி ஒன்றிய

திருவள்ளூர்:உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கச்சூர் கிராமத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம் மற்றும் ராமசந்திரா பல்கலைக்கழக ஊட்டசத்துவியல் துறை சார்பில் உலக தாய்ப்பால் தின விழா கொண்டாடப் பட்டது.

பூண்டி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ராமச்சந்திரா பல்கலைக் கழக ஊட்டச்சத்துவியல் துறைத் தலைவர் ஹேமமாலினி, திட்ட மேற்பார்வையாளர் எழிலரசி மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ்., இயக்குனர் ஸ்டீபன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், 'குழந்தை பிறந்த அரை மணிநேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; பிறந்த குழந்தைக்கு முதல், ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். இதன் மூலம் தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பாலுட்டும் தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X