மாணவரை தேடுது பள்ளி கவலையில் ஆசிரியர்கள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
முதுகுளத்துார்:மரவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராததால் மாணவர்களே இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே மரவெட்டி துலுக்கன்குறிச்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராம மாணவர்கள் வசதிக்காக 1997ல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப் பட்டு செயல்படுகிறது.இந்நிலையில்
மாணவரை தேடுது பள்ளி கவலையில் ஆசிரியர்கள்

முதுகுளத்துார்:மரவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராததால் மாணவர்களே இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே மரவெட்டி துலுக்கன்குறிச்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராம மாணவர்கள் வசதிக்காக 1997ல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப் பட்டு செயல்படுகிறது.
இந்நிலையில் இப்பள்ளியில் இந்தாண்டு ஒரு மாணவர் கூட சேரவில்லை.கடந்தாண்டு ஒரே ஒரு மாணவர் ஐந்தாம் வகுப்பு படித்தார். அவரும் 6ம் வகுப்பு தேர்ச்சியாகி வேறு பள்ளிக்கு சென்றார். மாணவர்களே இல்லாத நிலையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும் வந்து செல்கின்றனர்.
கிராமத்தினர் கூறியதாவது: மரவெட்டி, துலுக்கன்குறிச்சியில் பல ஆண்டுகளாக சாலை, குடிநீர் வசதி இல்லை. குழந்தைகள் நலன்கருதி பல குடும்பங்கள் நகருக்கு குடிபெயர்ந்து விட்டனர். தற்போது கிராமங்களில் முதியோர் மட்டுமே உள்ளனர்.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழ் பலமுறை சுட்டிக்காட்டிய போதும் அரசு அடிப்படை வசதிகள் செய்ய முன்வர வில்லை. இதனால் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு சென்று விட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X