சோள ரொட்டி,களிபள்ளிகளில் வழங்க திட்டம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெங்களூரு:பள்ளி சிறார்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு தீர்வு காண, மதிய உணவில் கேழ்வரகு, சோள ரொட்டி வழங்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, உணவு, பொது வினியோகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி சிறார்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு, தீர்வு காண அரசு பல திட்டங்களை செயல்படுத்தியது. மதிய உணவில் சத்தான காய்கறிகள், கீரைகள், சிறு தானியங்கள் சேர்ந்த உணவு

பெங்களூரு:பள்ளி சிறார்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு தீர்வு காண, மதிய உணவில் கேழ்வரகு, சோள ரொட்டி வழங்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, உணவு, பொது வினியோகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி சிறார்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு, தீர்வு காண அரசு பல திட்டங்களை செயல்படுத்தியது. மதிய உணவில் சத்தான காய்கறிகள், கீரைகள், சிறு தானியங்கள் சேர்ந்த உணவு வழங்கப்படுகிறது.வரும் நாட்களில், கோதுமை பாயாசம், சாதம், சாம்பார் வழங்கப்படும்.
வடமாவட்ட பகுதிகளுக்கு சோள ரொட்டி; தென் மாவட்ட பகுதிகளுக்கு கேழ்வரகு களி வழங்க திட்டமிட்டு உள்ளோம். அனைத்து பகுதிகளிலும், களி, சோள ரொட்டி சாப்பிடுவதில்லை. எனவே அந்தந்த பகுதிகளின் உணவு நடைமுறைக்கு தக்கபடி, தாலுகா வாரியாக களி, ரொட்டி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X