சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'சூட்சுமத்தை சொல்லி தருவாரா?'

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
'சூட்சுமத்தை சொல்லி தருவாரா?'-சென்னை வடபழநியில், செஞ்சி பட இசை வெளியீட்டு விழாவில், நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நான், 1983ல் எடுத்த, பிரம்மச்சாரிகள் படத்தால், 5 லட்சம் ரூபாய் இழப்பு. பின், 1990ல், நம்ம ஊரு மாரியம்மா படத்தில் லாபம் கிடைத்தது. 'பிரபுதேவா, மீனா நடித்த, டபுள்ஸ் படத்தால், 75 லட்சம் ரூபாய் இழப்பு. பார்த்திபன், தேவயானி
பக்க வாத்தியம்


'சூட்சுமத்தை சொல்லி தருவாரா?'



-சென்னை வடபழநியில், செஞ்சி பட இசை வெளியீட்டு விழாவில், நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நான், 1983ல் எடுத்த, பிரம்மச்சாரிகள் படத்தால், 5 லட்சம் ரூபாய் இழப்பு. பின், 1990ல், நம்ம ஊரு மாரியம்மா படத்தில் லாபம் கிடைத்தது. 'பிரபுதேவா, மீனா நடித்த, டபுள்ஸ் படத்தால், 75 லட்சம் ரூபாய் இழப்பு. பார்த்திபன், தேவயானி நடித்த, நினைக்காத நாளில்லை படத்தால், ஒன்றே கால் கோடி ரூபாய் இழப்பு. இப்படி நான் எடுத்த ஒன்பது படங்களால், 4.5 கோடி ரூபாய் காலியானது.'சினிமா உலகத்தில் நாணயம் இல்லை. நான், இப்போது பைனான்ஸ் செய்கிறேன். கொடுத்த பணத்தை வாங்க இழுத்தடிக்கின்றனர். தயாரிப்பாளர்களுக்கு உதவ சங்கத்தில் யாரும் இல்லை. முதல் திருடனே தயாரிப்பாளர் சங்கத்தில் தான் இருக்கிறார்' என்றார்.
தயாரிப்பாளர் ஒருவர், 'பல கோடி ரூபாய் இழப்புக்கு பின், இவரு எப்படி பைனான்சியரா மாறினாரு... அந்த சூட்சுமத்தை நம்ம சங்கத்து ஆட்களுக்கு சொல்லி தருவாரா...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஆக-202207:29:12 IST Report Abuse
D.Ambujavalli படம் எடுத்தால் ரிஸ்க் என்று அனுபவப்பட்டவர் அதே தொழிலுக்கு எப்படி பைனான்ஸ் செய்கிறார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X