கால்வாயில் கழிவு நீர் தேக்கம்நுாலகத்தில் வாசகர்கள் சிரமம்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி கிளை நுாலக வாசலில், கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், வாசகர்கள் அவதிப்படுகின்றனர்.நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி, பழைய ஊராட்சி அலுவலகம், காந்தி சாலையில், கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.இந்த நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் மற்றும் பிற புத்தகங்கள் உள்ளன.காலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்கள், மாணவர்கள், முதியோர்
கால்வாயில் கழிவு நீர் தேக்கம்நுாலகத்தில் வாசகர்கள் சிரமம்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி கிளை நுாலக வாசலில், கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், வாசகர்கள் அவதிப்படுகின்றனர்.

நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி, பழைய ஊராட்சி அலுவலகம், காந்தி சாலையில், கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.இந்த நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் மற்றும் பிற புத்தகங்கள் உள்ளன.காலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்கள், மாணவர்கள், முதியோர் இங்கு வந்து படிக்கின்றனர்.

முக்கிய நாளிதழ்கள், நுாலகத்திற்கு வராததால், வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.வாசகரான எஸ்.வெங்கடகிருஷ்ணன், 52, என்பவர் கூறியதாவது:இந்த நுாலகத்திற்கு பல ஆண்டுகளாக வருகிறேன். நுாலகத்தில் வாங்கி வந்த முக்கிய நாளிதழ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளிதழ் வாங்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறுகின்றனர். இதனால், தினசரி செய்திகளை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகிறோம்.தவிர, நுாலகத்தை சுற்றி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

நுாலக வாசலிலே கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.நுாலகத்தில் அமர்ந்து புத்தகங்களை வாசிக்க முடியாத அளவில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.நுாலகத்தை சுற்றி, செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி மிகவும் மோசமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X