சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பஞ்சாயத்தை தீர்க்க முடியுமா?

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பஞ்சாயத்தை தீர்க்க முடியுமா?'ஏற்கனவே நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வருகிறது. இதில், இந்த விவகாரமும் சேர்ந்து, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது...' என்று கொதிக்கிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.இம்மாநிலத்தில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, 99

அக்கம் பக்கம்


பஞ்சாயத்தை தீர்க்க முடியுமா?



'ஏற்கனவே நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வருகிறது. இதில், இந்த விவகாரமும் சேர்ந்து, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது...' என்று கொதிக்கிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
இம்மாநிலத்தில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 41 தொகுதிகளில் வென்றது. பா.ஜ., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஆனால், சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்முவுக்கு கேரளாவில் இருந்து ஒரு ஓட்டு கிடைத்தது; இது, கேரள அரசியல்வாதிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அந்த ஒரு ஓட்டை போட்டது யார் என்பது குறித்து, இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் இடையே பெரும் வாக்குவாதமே நடந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, லிண்டோ ஜோசப் என்ற எம்.எல்.ஏ., தான், பா.ஜ.,வின் திரவுபதி முர்முவுக்கு ஓட்டுப் போட்டவர் என, சொந்த கட்சியினரே, சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர்.
இதனால், ஆத்திரம் அடைந்த அவர், 'சொந்த கட்சியினரே, எனக்கு எதிராக இப்படிப்பட்ட தகவல்களை பரப்புகின்றனரே...' என, கண்ணீர் வடித்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். பினராயி விஜயனோ, 'இந்த பஞ்சாயத்தை எங்கு போய் தீர்ப்பது என தெரியவில்லையே...' என்று புலம்புகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X