நீண்ட காலமாகவே கடனாளர்கள் சிலர் கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கு முரண்பாடான கிரெடிட் ஸ்கோர் அளிப்பதால், நிதி சார்ந்த பின்னடைவையை சந்திப்பாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். சிலர், தங்களது கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல் அல்லது மோசமான கிரெடிட் ஸ்கோர் காரணமாக வங்கிகளில் சிறந்த வட்டி விகிதங்களில் கடன் பெற தகுதியில்ல்லாதவர்களாக ஆக்கப்படுவதாக ஆதங்கம் உள்ளது.
தற்போது இதுபோன்ற குளறுபடியால் பாதிக்கப்பட்டோர், கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் மீது புகார் அளி்க்க ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்தை அறிவித்துள்ளது. 'இது கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிரான குறைகளுக்கு இலவசமான மாற்று தீர்வு வழிமுறையை வழங்கும்' என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது பணக்கொள்கை மறுஆய்வு அறிக்கையின் போது அறிவித்தார்.
![]()
|
மேலும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களான டிரான்ஸ்யூனியன் சிபில், கிரிப் ஹைமார்க்,
ஈக்விஃபாக்ஸ் மற்றும் எக்ஸ்பீரியன் ஆகியவையும் குறைதீர்ப்பாளர் உள்கட்டமைப்பை அமைக்க வேண்டும்.
முன்னாள் வங்கியாளரும், நிதி ஆலோசகர் வி.என். குல்கர்னி கூறுகையில், தற்போது, இந்த கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கும் போது இந்த நிறுவனங்கள் தங்கள் குறைகளுக்கு பதிலளிக்கத் தவறினால், அவர்களுக்கு எந்த வழியும் இல்லை. ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் நடைமுறையின் கீழ் கொண்டு வரப்படுவதால், அத்தகைய கடன் வாங்குபவர்களுக்கு சிறிது நிவாரணம் கிடைக்கும்.குறைதீர்ப்பாளர் அத்தகைய புகார்களை ஏற்றுக்கொண்டவுடன், விஷயங்கள் வேகமெடுக்க துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி குறைதீர்ப்பாளர் திட்டம், பட்டியலிடப்பட்ட வங்கிகள், ரூ.50 கோடிக்கும் அதிகமாக தொகை டெபாசிட் கொண்ட கூட்டுறவு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும்.
![]()
|
நீங்கள் பல்வேறு வழிகளில் குறைதீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம். ஆன்லைனில் புகார் அளிக்க விரும்பினால், https://cms.rbi.org.in. தளத்திற்கு சென்று உங்களது தகவல்களை பதிவு செய்து, புகாரை பதிவு செய்யலாம். அல்லது CRPC@rbi.org.in என மின்னஞ்சல் முகவரிக்கோ, இலவச டோல் ப்ரீ எண்ணான 14448 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம்.