சிறுமி உயிரிழப்பு போலீசார் விசாரணை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கடப்பாக்கம்:இரண்டு நாட்களாக காய்ச்சலில் இருந்த 17 வயது சிறுமி, உயிரிழந்தார்.கடப்பாக்கம் அடுத்த கடப்பாக்கம் குப்பத்தைச் சேர்ந்தவர் சேகரின் 17 வயது மகள், புதுச்சேரியில் தனியார் கல்லுாரி ஒன்றில் பி.எஸ்சி., கணினி அறிவியல் படித்து வந்தார்.கடந்த 2ம் தேதி, காய்ச்சல் காரணமாக கடப்பாக்கத்தில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் இருந்துள்ளார்.இரு

கடப்பாக்கம்:இரண்டு நாட்களாக காய்ச்சலில் இருந்த 17 வயது சிறுமி, உயிரிழந்தார்.

கடப்பாக்கம் அடுத்த கடப்பாக்கம் குப்பத்தைச் சேர்ந்தவர் சேகரின் 17 வயது மகள், புதுச்சேரியில் தனியார் கல்லுாரி ஒன்றில் பி.எஸ்சி., கணினி அறிவியல் படித்து வந்தார்.கடந்த 2ம் தேதி, காய்ச்சல் காரணமாக கடப்பாக்கத்தில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் இருந்துள்ளார்.

இரு கால்களிலும் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும்போதே மயங்கினார். அங்கிருந்து உடனடியாக, செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு, பரிசோதித்த செய்த மருத்துவர், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியின் இறப்பை விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X