சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட பதிவுத்துறை!

Added : ஆக 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட பதிவுத்துறை!''பாரு, பாரு தேக்கோ...'' என, பாடியபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''என்ன பாய், ஹிந்தி பாட்டெல்லாம் பலமா இருக்கே...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''சொல்றேன்... தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம் நடத்துற மதுக்கடைகளுக்கு பக்கத்துலயே, 'பார்' நடத்த தனியாருக்கு உரிமம் வழங்குறாங்க பா... ஒரு சில மாவட்டங்கள்ல பார்

 டீ கடை பெஞ்ச்


அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட பதிவுத்துறை!


''பாரு, பாரு தேக்கோ...'' என, பாடியபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''என்ன பாய், ஹிந்தி பாட்டெல்லாம் பலமா இருக்கே...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''சொல்றேன்... தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம் நடத்துற மதுக்கடைகளுக்கு பக்கத்துலயே, 'பார்' நடத்த தனியாருக்கு உரிமம் வழங்குறாங்க பா... ஒரு சில மாவட்டங்கள்ல பார் நடத்த, 'டெண்டர்' விட்டிருக்காங்க...

''அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், ஆளுங்கட்சி மாவட்ட, நகர, ஒன்றிய செயலர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவங்களுக்கு பார் உரிமம் வாங்கித் தர முட்டி மோதுறாங்க பா...

''டாஸ்மாக் மேலாளர்களிடம், 'நாங்க சொல்ற ஆளுக்கு தான் உரிமம் வழங்கணும்'னு நெருக்கடி தர்றாங்க... 'காசு பார்க்க இது தான் நல்ல சான்ஸ்'னு கணக்கு போட்ட சில மேலாளர்கள், தங்களுக்கும் சேர்த்து கமிஷன் தொகையை வாங்கித் தருமாறு கேட்டு, ஆளுங்கட்சியினரோட கூட்டு சேர்ந்துட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''தேனி மாவட்டம் முதலிடம் பிடிச்சிட்டுல்லா...'' என, நாளிதழை மடித்தபடியே பேசினார் அண்ணாச்சி.

''எதுலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''தி.மு.க., உட்கட்சி தேர்தல் விவகாரம் தொடர்பா, தேனி மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய பொறுப்பாளர் ரத்னசபாபதியை, வீடு புகுந்து ரவுடி கும்பல் தாக்குன வீடியோவை பார்த்து பலரும் பதறி போயிட்டாவ... இது, தி.மு.க., தலைமையை, 'அப்செட்' ஆக்கிட்டு வே...

''உட்கட்சி தேர்தல் தகராறுல, தேனி மாவட்டத்துக்கு தான் முதலிடம்... தி.மு.க.,வுல அமைப்பு ரீதியா இருக்கிற, 77 மாவட்டங்கள்ல தேனி தெற்கு - வடக்கு மாவட்டங்கள்ல தான் வன்முறை சம்பவங்கள் அதிகமா நடக்குன்னு உளவுத்துறை, 'ரிப்போர்ட்' குடுத்துட்டு வே...

''இதுக்கு, நிர்வாக திறமை இல்லாத மாவட்ட செயலர்களின் அலட்சியமே காரணம்னு சொல்லுதாவ... விரைவில் நடக்க இருக்கிற மாவட்ட செயலர் தேர்தல்ல, வலுவான ஆட்களை பதவியில நியமிச்சா தான், மாவட்டத்துல கட்சியை கட்டுக்கோப்பா வச்சிருக்க முடியும்னு, ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளும் தலைமைக்கு அழுத்தம் குடுத்திருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.உடனே, ''பத்திரப்பதிவுத் துறையில, உயர் அதிகாரிகளை சிறப்பா, 'கவனிக்கும்' நபர்களுக்கு பணம் கொழிக்கற ஆபீஸ்களுக்கு, 'டிரான்ஸ்பர்' கிடைக்கறது ஓய்...'' என கடைசி மேட்டருக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''அங்க போனதும், மேலிடத்துக்கு கப்பம் கட்டிண்டே இருந்தா, அங்கயே, 'டேரா' போட்டுக்கலாம்... இந்த குளறுபடிகளை சரி செய்ய, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் போன வருஷம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் ஓய்...

''இதன்படி, மொத்தம் இருக்கற, 575 பத்திரப்பதிவு ஆபீஸ்கள்ல, அதிகமா பத்திரங்கள் பதிவு நடக்கற, 100 ஆபீஸ்கள்ல இருக்கற சார் - பதிவாளர்களுக்கு வருஷத்துக்கு ஒரு முறையும், அதுக்கு அடுத்தடுத்த நிலையில இருக்குற ஆபீஸ்கள்ல, இரண்டு மற்றும் மூணு வருஷத்துக்கு ஒரு முறையும், 'டிரான்ஸ்பர்' போடணும்னு உத்தரவு போட்டார்...

''இந்த அறிவிப்பு, 'பேப்பர்' அளவுல மட்டுமே இருக்காம்... 'வளமான' ஆபீஸ்கள்ல சில சார் - பதிவாளர்களும், உதவியாளர்களும் பசை தடவிய மாதிரி உட்கார்ந்துண்டு இருக்கா ஓய்...

''அட, மெடிக்கல் காரணங்களுக்காக இடமாறுதல் கேட்டா கூட கிடைக்கறது இல்லை... 'பதிவுத்துறை தலைவரே, தன் அறிவிப்பை கண்டுக்கலையே'ன்னு அதிகாரிகள் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஆக-202207:32:50 IST Report Abuse
D.Ambujavalli அறிவிப்பை எல்லாம் யார் பொருட்படுத்துவார்கள் கடிதம் வந்ததும், கோப்பில் சேர்த்து, ரெகார்டுக்கு அனுப்பி முடிக்க வேண்டியதுதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X