இதே நாளில் அன்று

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஆகஸ்ட் 6, 1959 உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில், 1959ல் இதே நாளில் பிறந்தவர் ராஜேந்திர சிங். பள்ளி பருவத்தில், காந்தி அமைதி அறக்கட்டளை உறுப்பினர் ரமேஷ் சர்மாவுடன் இணைந்து சமூக சேவை செய்தார். பின், பாரதிய ரிஷிகுல் ஆயுர்வேதிக் மஹா வித்யாலயாவில், ஆயுர்வேதம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம் பெற்றார்.ராஜஸ்தான்


இதே நாளில் அன்று


ஆகஸ்ட் 6, 1959



உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில், 1959ல் இதே நாளில் பிறந்தவர் ராஜேந்திர சிங். பள்ளி பருவத்தில், காந்தி அமைதி அறக்கட்டளை உறுப்பினர் ரமேஷ் சர்மாவுடன் இணைந்து சமூக சேவை செய்தார். பின், பாரதிய ரிஷிகுல் ஆயுர்வேதிக் மஹா வித்யாலயாவில், ஆயுர்வேதம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம் பெற்றார்.
ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று மருத்துவம், கல்வி சேவை செய்தார். அங்கு தண்ணீரின் தேவையை உணர்ந்து, தனியாக ஊர் குளத்தை சீரமைத்தார். கேலி பேசிய ஊர் மக்கள், திடீர் மழையில் குளம் நிறைந்ததும் மனம் மாறி, இவருடன் இணைந்து, 36 குளங்களை வெட்டினர். ராஜஸ்தானில், ஏழு நதிகளை மீட்டு, நாட்டில், 4,500க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டி, 1,200 கிராமங்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கினார். இவரின் செயல்பாடுகளுக்காக, 'ராமன் மகசேசே விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, ஸ்டாக்ஹோம் வாட்டர் விருது' உள்ளிட்ட கவுரவங்களை பெற்றுள்ளார்.தண்ணீர் மனிதரின், 63வது பிறந்த நாள் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X