மின் வாரிய அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கிடைக்குமா?

Added : ஆக 05, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே, வாடகை கட்டடத்தில் இயங்கும் மின் வாரிய அலுவலகத்திற்கு, சொந்த கட்டடம் கட்ட, கோரிக்கை எழுந்துள்ளது.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மின் வாரிய அலுவலகத்திற்கு, இப்பகுதி மக்கள் சென்று, மின் கட்டணம் செலுத்தி வர சிரமப்பட்டனர்.இவர்களின்
மின் வாரிய அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கிடைக்குமா?

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே, வாடகை கட்டடத்தில் இயங்கும் மின் வாரிய அலுவலகத்திற்கு, சொந்த கட்டடம் கட்ட, கோரிக்கை எழுந்துள்ளது.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மின் வாரிய அலுவலகத்திற்கு, இப்பகுதி மக்கள் சென்று, மின் கட்டணம் செலுத்தி வர சிரமப்பட்டனர்.இவர்களின் வசதிக்காக, பாலுார் ஊராட்சியில், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், பெட்ரோல் 'பங்க்' அருகில், வாடகை கட்டடத்தில் மின் வாரியம் அமைக்கப்பட்டது.

இங்கிருந்து ஆறு மாதங்களுக்கு முன், அதே சாலையில், மேலச்சேரி கூட்டுச்சாலை எதிரில் இடமாற்றம் செய்யப்பட்டது. ஒரே அலுவலகம், ஐந்து கடைகளில் வாடகைக்கு செயல்படுகிறது. இந்த அலுவலகத்திற்கு கீழ் தேவனுார், உள்ளாவூர், பாலுார், மேலச்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மின் இணைப்புகளுக்கான, மின் கட்டணம் இங்கு வசூலிக்கப்படுகிறது.

போதிய இடவசதி இல்லாமல் ஊழியர்கள் மற்றும் கட்டணம் செலுத்தவரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மின் வாரிய அலுவலகத்திற்கு, சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X