சர்வீஸ் சாலையில் வழியின்றி பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மறைமலை நகர்:சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் உள்ள சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பில் உள்ளதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.சிங்கப்பெருமாள் கோவில், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை உள்ளது. இப்பகுதியில் பேருந்து நிறுத்தம், பஜார் வீதி இருக்கிறது. சர்வீஸ் சாலையின் இருபுறமும் உணவகங்கள், மளிகை, நகை, ஜவுளி, டீ மற்றும் காய்கறி என,

மறைமலை நகர்:சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் உள்ள சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பில் உள்ளதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

சிங்கப்பெருமாள் கோவில், ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை உள்ளது. இப்பகுதியில் பேருந்து நிறுத்தம், பஜார் வீதி இருக்கிறது. சர்வீஸ் சாலையின் இருபுறமும் உணவகங்கள், மளிகை, நகை, ஜவுளி, டீ மற்றும் காய்கறி என, 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன.

சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தங்களின் அன்றாட தேவைக்கான பொருட்கள் வாங்க, பஜார் வீதிக்கு வருகின்றனர்.இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை சர்வீஸ் சாலையிலேயே நிறுத்தி செல்வதால், தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து, வாகன ஓட்டி வெங்கடேசன், 30, என்பவர் கூறியதாவது:சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், காலை மற்றும் மாலை நேரத்தில், இந்த சாலையில் செல்லவே மிகவும் சிரமமாக உள்ளது.சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்களும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. சிலர், தங்களின் இருசக்கர வாகனங்களை காலையில் இங்கு நிறுத்தி, இரவில் வந்து எடுத்து செல்கின்றனர்.

மேலும், கடைகளுக்கு பொருட்களை இறக்க வரும் வாகனங்களும் சாலையில் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், நெரிசல் அதிகமாகிறது.குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே, பொருட்களை இறக்கும் வாகனங்களை, சாலையில் நிறுத்த அனுமதித்தால், போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X