கும்மிடி பேரூராட்சியில்15 தீர்மானங்கள்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கும்மிடிப்பூண்டி:'கும்மிடிப்பூண்டி நகருக்கு புதிய திட்டங்கள் எதுவும் தேவையில்லை. நகரை சுகாதாரமாக வைத்திருந்தால் போதும்' என, கவுன்சிலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், அதன் தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த சகிலா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் யமுனா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், பிறப்பு, இறப்பு, வரவு, செலவு, திட்ட

கும்மிடிப்பூண்டி:'கும்மிடிப்பூண்டி நகருக்கு புதிய திட்டங்கள் எதுவும் தேவையில்லை. நகரை சுகாதாரமாக வைத்திருந்தால் போதும்' என, கவுன்சிலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், அதன் தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த சகிலா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் யமுனா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், பிறப்பு, இறப்பு, வரவு, செலவு, திட்ட அனுமதி, கவுன்சிலர்கள் கோரிக்கை ஆகியவற்றின் மீது, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் நடத்திய விவாதம்:
ரவி,- 4வது வார்டு கவுன்சிலர் அ.தி.மு.க.: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, துாய்மை பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என, அனைத்து கவுன்சிலர்களும் பல முறை கோரிக்கை விடுத்தோம். இருப்பினும், இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.மாறாக, நகரம் முழுதும், குப்பை குவியல், கழிவு நீர் தேக்கம் காணப்படுகிறது. இதனால், மக்களின் சுகாதாரம் கடுமையாக பாதித்துள்ளது.
பேரூராட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்த வேண்டாம். தயவு செய்து நகரை சுகாதாரமாக வைத்திருக்க திட்டம் வகுத்து செயல்படுத்துங்கள்.இதை தொடர்ந்து மற்ற கவுன்சிலர்களும், அதே கோரிக்கையை முன்வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, செயல் அலுவலர் யமுனா தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X