புகார் பெட்டி...: செங்கல்பட்டு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
நீர்நிலையில் கட்டட கழிவுகள் தண்ணீர் ஓடுவதில் சிக்கல்திருக்கழுக்குன்றம் தாலுகா, புதுப்பட்டினம் கிராமத்தில் கழிவேளி எனும் நீர்நிலை தேக்கம் உள்ளது.மழைக்காலத்தில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் மழை நீர், இதன் வழியாக கடலுக்கு செல்லும்.இந்த நீர்நிலை பகுதியில் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழை நீர், கடலுக்கு செல்லாமல், குடியிருப்பு
புகார் பெட்டி...:  செங்கல்பட்டு

நீர்நிலையில் கட்டட கழிவுகள் தண்ணீர் ஓடுவதில் சிக்கல்

திருக்கழுக்குன்றம் தாலுகா, புதுப்பட்டினம் கிராமத்தில் கழிவேளி எனும் நீர்நிலை தேக்கம் உள்ளது.மழைக்காலத்தில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் மழை நீர், இதன் வழியாக கடலுக்கு செல்லும்.இந்த நீர்நிலை பகுதியில் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழை நீர், கடலுக்கு செல்லாமல், குடியிருப்பு பகுதிகளை சூழ்கிறது. அதுமட்டுமின்றி, தண்ணீர் தேங்கி கழிவு நீராக இருப்பதால் கொசு தொல்லை, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வடகிழக்கு பருவ மழைக்கு முன், நீர்நிலையில் தேங்கியுள்ள கட்டட கழிவுகள் அகற்றப்படுமா?

-ஊர் பொதுமக்கள், புதுப்பட்டினம்.

ஜல்லிக்கற்கள் பெயர்ந்தசாலையை சீரமைக்கணும்

மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைளுக்கு செல்லும் காமராஜர் சாலை சிதிலமடைந்து, ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால், அவ்வழியே வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலையைசீரமைக்க வேண்டும்.

ஆ.குபேந்திரன், மறைமலை நகர்.

பி.டி.ஓ., அலுவலகத்தில்மரக்கன்று 'வளர்ப்பு'காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தின் மேல் தளத்தில், மழை நீர் வெளியேறும் குழாய் உள்ளது. இதை ஒட்டி, கட்டடத்தின் மாடியில் 1 அடியில் அரச மரம் வளர்ந்து உள்ளது. இந்த செடியை அகற்றவில்லை எனில், கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, பாதிப்பு வரும். செடியை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.மோகன்,காட்டாங்கொளத்துார்

பயணியர் நிழற்குடைபராமரிப்பின்றி பழுது

திருப்போரூர் அடுத்த ராயமங்கலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தினர் வசதிக்காக, பல ஆண்டுகளுக்கு முன்பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்தனர். நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் நிழற்குடை உள்ளது. இதனால் கிராம மக்கள், நிழற்குடை பக்கம் செல்வதை தவிர்க்கின்றனர்.ஒன்றிய நிர்வாகம், பயணியர் நிழற்குடையை சீரமைக்க அல்லது புதிய நிழற்குடை அமைத்து தர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.மோகன், ராயமங்கலம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X