கோவளத்தில் வடிகால் திட்டம்: ரூ.1,243 கோடியில் அனுமதி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை, கோவளம் வடிநிலைப்பகுதியில், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் திட்டம் வாயிலாக 306 கி.மீ., நீளத்துக்கு, 1,243 கோடி ரூபாய் செலவில் வடிகால் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.இதில், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லுார், கானத்துார், உத்தண்டி ஆகிய பகுதிகளில் 309 கோடி ரூபாய் செலவில் 52 கி.மீ., நீளத்துக்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட

சென்னை:சென்னை, கோவளம் வடிநிலைப்பகுதியில், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் திட்டம் வாயிலாக 306 கி.மீ., நீளத்துக்கு, 1,243 கோடி ரூபாய் செலவில் வடிகால் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.

இதில், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லுார், கானத்துார், உத்தண்டி ஆகிய பகுதிகளில் 309 கோடி ரூபாய் செலவில் 52 கி.மீ., நீளத்துக்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.இப்பகுதிகள், இயற்கையாக மழை நீரை உறிஞ்சும் நிலப்பரப்பாக இருப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் மழை நீர் வடிகால் கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்விலும் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில், இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், தேசிய கடல் வளர் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம், பொதுப்பணித் துறை அடங்கிய குழுவை தீர்ப்பாயம் அமைத்தது.

இக்குழுவின் பரிந்துரைப்படி, கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி இல்லாமல், மழை நீர் வடிகால் அமைக்க முடியாது என, தீர்ப்பாயம் உத்தரவிட்டது.தீர்ப்பாய உத்தரவுப்படி, இத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி, மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தில், சென்னை மாநகராட்சி விண்ணப்பித்தது.இவற்றை பரிசீலனை செய்த ஆணையம், பசுமை தீர்ப்பாயத்தில் அளித்த மழை நீர் வடிகால் வடிவமைப்பு, திருபுகழ் கமிட்டியின் பரிந்துரைப்படி, மழை நீர் வடிகால் கட்டமைப்பு மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிகோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளிக்கும்பட்சத்தில், கோவளம் வடிநிலைப் பகுதியில் 3ம் திட்ட பகுதியில் மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X