கன்னியம்மன் கோவில் தீமிதி விழா விமரிசை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:மணப்பாக்கம் கன்னியம்மன் கோவிலில், தீமிதி விழா , விமரிசையாக கொண்டாடப்பட்டது.செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராம பாலாற்றங்கரையில், புகழ்பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி திருவிழா, இக்கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டு ஆடி திருவிழா, ஜூலை 17ல் கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துங்கியது.தொடர்ந்து, மூன்றாம் ஆடி
கன்னியம்மன் கோவில் தீமிதி விழா விமரிசை

செங்கல்பட்டு:மணப்பாக்கம் கன்னியம்மன் கோவிலில், தீமிதி விழா , விமரிசையாக கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராம பாலாற்றங்கரையில், புகழ்பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி திருவிழா, இக்கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டு ஆடி திருவிழா, ஜூலை 17ல் கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துங்கியது.

தொடர்ந்து, மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமையொட்டி, கன்னியம்மனுக்கு நேற்று, சிறப்பு அபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்தனர். வேண்டுதலுக்காக நேர்த்தி கடன் செலுத்திவருகின்றனர்.

மாலை 5:00 மணிக்கு, கோவிலிலிருந்து அம்மன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, ஊர்வலமாக சென்றார். நீணட வரிசையில் காத்திருந்த 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், பூக்குழியில் இறங்கி தீ மிதித்தனர்.

செங்கல்பட்டிலிருந்து மணப்பாக்கத்திற்கு, அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக, கோவில் வளாகம் முழுதும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X