தோட்டக்கலை பண்ணை மேம்படுத்த நடவடிக்கை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
கூடலுார்:கூடலுார் தோட்டக்கலை பண்ணையில், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூடலுார் நாடுகாணி அருகே, பொன்னுார் பகுதியில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை, செயல்பட்டு வருகிறது. இங்கு, தேயிலை, காபி உள்ளிட்ட நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு, வாசனை திரவிய பூங்கா அமைக்கும் பணிகள் கிடப்பில் போட்டுள்ள
தோட்டக்கலை பண்ணை மேம்படுத்த நடவடிக்கை

கூடலுார்:கூடலுார் தோட்டக்கலை பண்ணையில், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூடலுார் நாடுகாணி அருகே, பொன்னுார் பகுதியில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை, செயல்பட்டு வருகிறது. இங்கு, தேயிலை, காபி உள்ளிட்ட நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இங்கு, வாசனை திரவிய பூங்கா அமைக்கும் பணிகள் கிடப்பில் போட்டுள்ள நிலையில், வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கும், சுற்றுலா பயணிகள் வருகை இல்லை.இங்கு, சுற்றுலாவை மேப்படுத்த அரசு ஒதுக்கிய, 50 லட்சம் ரூபாய் நிதியை கொண்டு, இரண்டு இடங்களில் காட்சி கோபுரங்கள், 'இன்டர்லாக்' சாலை அமைப்பது உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இயற்கை சார்ந்த சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வசதியாக, சிறப்பு உதவி இயக்குனர் ரத்தினவேல் நியமிக்கப்பட்டு, பணிகள் நடக்கிறது.மக்கள் கூறுகையில், 'இதனை சுற்றுலா மையமாக மாற்றுவதன் மூலம், இப்பகுதி வளர்ச்சி அடைவதுடன், ஆண்டுதோறும் நடைபெறும், வாசனை திரவிய கண்காட்சியை இங்கே நடத்தலாம்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X