வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னையின் புதிய பொழுதுபோக்கு மையமாக மாறி வரும் கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் ஆக.12 முதல் அன்லிமிடெட் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.
பல்வேறு பிரிவுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளது. திரில்லர், கிரைம், ரொமான்ஸ், கிளாசிக்ஸ் என பல்வேறு புனைவு சார்ந்த புத்தகங்களும், சுயமுன்னேற்ற புத்தகங்கள், தொழில், சுயசரிதம், ஆரோக்கியம், பயணம், விளையாட்டு உள்ளிட்ட புனைவு அல்லாத புத்தகங்களும், குழந்தைகளுக்கு ஏற்ற சவுண்ட் புக்ஸ், என்சைக்ளோபீடியோ, டச் அண்ட் பீல் புத்தகங்கள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளது.
![]()
|
அன்லிமிடெட் புத்தக கண்காட்சி என்ற பெயருக்கு ஏற்ப, புத்தக பிரியர்கள் சிறிய, நடுத்தர,பெரிய அளவிலான மூன்று பெட்டிகளை தேர்வு செய்யலாம். பெட்டிகளுக்கு உரிய மட்டும் கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமானது. அதில் எவ்வளவு புத்தகங்கள் எடுத்து செல்ல முடியுமோ, அந்தளவு புத்தகங்களை எடுத்து செல்லலாமென ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
நடைபெறும் நாள் : ஆகஸ்ட் 12 முதல் 21 வரை
நேரம் : காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.
இடம் : கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் (மண்டலம் 3 ஏ, பி)