சத்துணவுக்கூட கட்டடத்தில் செடிகள் முளைப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஆர்.கே.பேட்டை:அரசு பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட சத்துணவுக் கூடம் வலுவிழந்து வருகிறது.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சிங்கசமுத்திரம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 70 மாணவர்கள் படித்து வருகின்றனர்.மாணவர்களுக்காக, 22 ஆண்டுகளுக்கு முன், சத்துணவுக்கூடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த கட்டடம் பயன்பாட்டில்
சத்துணவுக்கூட கட்டடத்தில் செடிகள் முளைப்பு

ஆர்.கே.பேட்டை:அரசு பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட சத்துணவுக் கூடம் வலுவிழந்து வருகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சிங்கசமுத்திரம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 70 மாணவர்கள் படித்து வருகின்றனர்.மாணவர்களுக்காக, 22 ஆண்டுகளுக்கு முன், சத்துணவுக்கூடம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த கட்டடம் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது.
இந்த கட்டடத்தின் மேல் பகுதியில், செடிகள் முளைத்து வருகின்றன. இதனால், கட்டடம் வலுவிழந்து வருகிறது.கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் வலுவிழந்து வரும் கட்டடத்தால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்டடத்தை சீரமைத்து மறு பயன்பாடிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X