ரூ.12 கோடியில் 17 ஏரிகள் சீரமைப்பு பணி...துவக்கம்!: மற்ற நீர்நிலைகளை தூர் வார விவசாயிகள் ஆவல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
 காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 17 ஏரிகள், 12 கோடி ரூபாயில் சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளது. வடகிழக்கு பவரு மழைக்கு முன், மாவட்டத்தில் உள்ள பிற ஏரிகளையும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை பராமரிப்பில், 434 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மழை காலத்திற்கு முன்
ரூ.12 கோடியில் 17 ஏரிகள் சீரமைப்பு பணி...துவக்கம்!: மற்ற நீர்நிலைகளை தூர் வார விவசாயிகள் ஆவல்

 காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 17 ஏரிகள், 12 கோடி ரூபாயில் சீரமைப்பு பணிகள் துவங்கி உள்ளது. வடகிழக்கு பவரு மழைக்கு முன், மாவட்டத்தில் உள்ள பிற ஏரிகளையும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை பராமரிப்பில், 434 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மழை காலத்திற்கு முன் பராமரிக்கப்படுவது வழக்கம்.தற்போது 11 கோடியே 84 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் 17 ஏரிகளில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

உலக வங்கி நிதியில் சீரமைப்பு பணி துவங்கிஉள்ளன. அதில் ஏரி மதகு சீரமைப்பு மற்றும் பழுதடைந்த மதகு புதுப்பித்தல், ஏரி கரையை பலப்படுத்துதல், ஏரி நீர்வரத்து கால்வாய் துார் வாரி சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 2019ம் ஆண்டு மாவட்டத்தில் 129 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மாவட்டத்தில் பல ஏரிகள் துார் வாரி ஆழப்படுத்தாமல் உள்ளன. ஆழப்படுத்தினால் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஏரிகளில் கருவேல மரங்கள் வளர்வதால் நிலத்தடி நீர் உறுஞ்சப்படுகிறது. இதனால் அந்த மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி 40 ஆண்டுகளுக்கு முன் துார் வாரப்பட்டது. இந்த ஆண்டு ஏரி சீரமைப்பு பணி நடக்கும் போது துார் வாரினால், வரும் காலங்களில் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்கலாம் என விவசாயி கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏரியில் கருவேல மரங்கள் அகற்றாததால் ஆழப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே போல் காலம் கடத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதே போல் பல ஏரிகளில் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. வடகிழக்கு பருவ மழைக்கு முன் அனைத்து ஏரிகளும் சீரமைக்க வேண்டும்.

இது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:உலக வங்கி நிதியில் ஏரிகள் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. பெரும்பாலான ஏரிகளில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றுவதற்கு வனத்துறையினரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மரங்களை அகற்றி இருந்தால் பல ஏரிகள் ஆழப்படுத்தியிருக்கலாம். அகற்றாததால் மற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி 15 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X