பெரும்பாக்கம் ஏரியில் பன்றிகள் வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதிப்பதாக மக்கள் எதிர்ப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:பெரும்பாக்கம் ஏரியில், சிலர் கூண்டு அமைத்து, பன்றிகள் வளர்ப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.திருவள்ளூர் நகராட்சி பகுதியில், பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம், நகராட்சி பகுதியில் தடையை மீறி வளர்க்கப்பட்ட, 42 பன்றிகளை, சுகாதார அலுவலர்கள் பிடித்து அகற்றினர்.மேலும், பன்றிகள் வளர்த்தால்,
பெரும்பாக்கம் ஏரியில் பன்றிகள் வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதிப்பதாக மக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர்:பெரும்பாக்கம் ஏரியில், சிலர் கூண்டு அமைத்து, பன்றிகள் வளர்ப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சி பகுதியில், பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம், நகராட்சி பகுதியில் தடையை மீறி வளர்க்கப்பட்ட, 42 பன்றிகளை, சுகாதார அலுவலர்கள் பிடித்து அகற்றினர்.மேலும், பன்றிகள் வளர்த்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட, 2வது வார்டில், பெரும்பாக்கம் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள இந்த ஏரியில், வெளியூர்களைச் சேர்ந்தோர், குடும்பத்துடன் குடிசை அமைத்து, பன்றிகளை வளர்த்து வருகின்றனர். பன்றிகளை அடைக்க, கூண்டும் அமைத்துள்ளனர்.பகலில், அவற்றை அவிழ்த்துவிட்டு, பெரும்பாக்கம், ஜவஹர் பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு, இரவில், மீண்டும் பெரும்பாக்கம் ஏரியில் அமைக்கப்பட்ட கூண்டுகளில் அடைத்து வருகின்றனர்.
ஏற்கனவே கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், நகராட்சி தடையை மீறி, ஏரிக்குள் பன்றிகள் வளர்த்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.மேலும், நகராட்சி பகுதிகளிலும், ஏரியிலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்; எனவே, ஏரிக்குள் வளர்க்கப்படும் பன்றிகளை, பொதுப்பணி துறை மற்றும் சுகாதார துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X