பாலிதீன் கவரில் உணவு வகைகள் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை பாயுமா?

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:'பாலிதீன் கவரில் உணவுகள் வழங்கும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக மண்ணுக்கு பாதிப்பு ஏற்படாத வாழை, தாமரை இலைகள் மற்றும் பாக்கு மட்டை தட்டுகள், கோப்பைகளை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மஞ்சள் பை என்ற

ஸ்ரீபெரும்புதுார்:'பாலிதீன் கவரில் உணவுகள் வழங்கும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக மண்ணுக்கு பாதிப்பு ஏற்படாத வாழை, தாமரை இலைகள் மற்றும் பாக்கு மட்டை தட்டுகள், கோப்பைகளை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மஞ்சள் பை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் தாலுகாவில் உள்ள 90 சதவீத உணவகங்களில் பாலிதீன் கவர்களில் சுட சுட உணவு பரிமாறப்படுகிறது. குறிப்பாக சிறு உணவகங்கள், கையேந்தி பவன் எனப்படும் தள்ளுவண்டி உணவகங்களில் வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், டீ கடைகளில் பாலிதீன் கவர்களில் டீ பார்சல் செய்து வாடிகையாளர்களுக்கு வழங்கப் படுகின்றன. அரசு டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள அனைத்து பார்களிலும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன.இவை பயன்பாட்டிற்கு பின்பு துாக்கி வீசப்படுவதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, பாலிதீன் பொருட்களை பயன்படுத்தும் ஹோட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X