மூதாட்டி உடல் மீட்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மூதாட்டி உடல் மீட்புதிருத்தணி: திருத்தணி அடுத்த பூனிமாங்காடு செல்லும் சாலையில் ஒரு தனியார் கம்பெனி அருகே, 80 வயதான மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்தில் பார்த்த போது, மூதாட்டி இறந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

மூதாட்டி உடல் மீட்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த பூனிமாங்காடு செல்லும் சாலையில் ஒரு தனியார் கம்பெனி அருகே, 80 வயதான மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்தில் பார்த்த போது, மூதாட்டி இறந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மாணவி தற்கொலை
ஊத்துக்கோட்டை: ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகள் கோபிகா, 15. ஆரணி அரசு மேல்நிலை பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 26ம் தேதி பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வந்தார். இதனால் அவரது தந்தை பார்த்திபன் திட்டியுள்ளார். இதில் மன வேதனை அடைந்த கோபிகா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு உயிரிழந்தார். ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X