சுகாதார கழிப்பறை கட்டடம் பராமரிக்க வலியுறுத்தல்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலை, கந்தன் பூங்கா வளாகத்தில் உள்ள சுகாதார கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்து வரும் அரசமரச்செடிகளால் கட்டடம் வலுவிழந்து சேதமாகும் நிலை உள்ளது.காஞ்சிபுரம் ரயில்வே சாலை, கந்தன் பூங்கா வளாகத்தில், 2003ல், 10 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த சுகாதார கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.கழிப்பறையை பயன்படுத்த பொதுமக்களிடம் இருந்து கட்டணம்
சுகாதார கழிப்பறை கட்டடம் பராமரிக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலை, கந்தன் பூங்கா வளாகத்தில் உள்ள சுகாதார கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்து வரும் அரசமரச்செடிகளால் கட்டடம் வலுவிழந்து சேதமாகும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலை, கந்தன் பூங்கா வளாகத்தில், 2003ல், 10 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த சுகாதார கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.கழிப்பறையை பயன்படுத்த பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் கழிப்பறை கட்டடத்தை முறையாக பராமரிக்கவில்லை.

இதனால் கழிப்பறையின் கதவுகள் துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளன. கழிப்பறையின் மேல்தளத்தில், அரசமரச்செடிகள் வேரூன்றி வளர்ந்து வருகின்றன. இச்செடிகளின் வேர்களால் கட்டடம் வலுவிழந்து சேதமாகும் நிலை உள்ளது.எனவே, கழிப்பறைக்கு கதவுகள் அமைத்து, மரத்தின் மீது வளர்ந்துவரும் அரசமரச்செடிகளை வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X