சென்னை குடிநீர் கையிருப்பு8.04 டி.எம்.சி.,யாக குறைவு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், குடிநீர் கையிருப்பு கடந்த ஆண்டை போலவே 8.04 டி.எம்.சி.,யாக உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. புதிதாக தேர்வாய் கண்டிகை ஏரியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., தற்போது, இவற்றில் 8.04 டி.எம்.சி., இருப்பு உள்ளது.

சென்னை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், குடிநீர் கையிருப்பு கடந்த ஆண்டை போலவே 8.04 டி.எம்.சி.,யாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. புதிதாக தேர்வாய் கண்டிகை ஏரியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., தற்போது, இவற்றில் 8.04 டி.எம்.சி., இருப்பு உள்ளது.

அதிகபட்சமாக, செம்பரம்பாக்கத்தில், 3.18 டி.எம்.சி., புழலில் 2.96, பூண்டியில் 1.28, தேர்வாய் கண்டி கையில் 0.50, சோழவரத்தில் 0.13 டி.எம்.சி., இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே நாளில், 8.07 டி.எம்.சி., நீர் இருந்தது. தற்போதும், அதே அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளுக்கு, பூண்டி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X