மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

Added : ஆக 05, 2022 | |
Advertisement
செங்குன்றம்:கட்டுமானத்திற்கான இரும்பு கம்பியை இயந்திரத்தால் வெட்டும் போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.சென்னை புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் தாஸ், 57; கட்டுமான தொழிலாளி. அவர், நேற்று மதியம் 2:00 மணியளவில், செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சி, புது நகர், பாலாஜி கார்டன் பகுதியில், ரவி என்பவர் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டும் பணியில்

செங்குன்றம்:கட்டுமானத்திற்கான இரும்பு கம்பியை இயந்திரத்தால் வெட்டும் போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.

சென்னை புழல் அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் தாஸ், 57; கட்டுமான தொழிலாளி. அவர், நேற்று மதியம் 2:00 மணியளவில், செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சி, புது நகர், பாலாஜி கார்டன் பகுதியில், ரவி என்பவர் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதற்காக, மின் இணைப்பு பொருத்திய இயந்திரம் வாயிலாக, இரும்பு கம்பிகளை வெட்டினார். அப்போது, எதிர்பாராத விதமாக, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில், சம்பவ இடத்திலேயே தாஸ் பலியானார். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X