திருப்போரூர்:திருப்போரூர் தாலுகாவில், மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என, நீண்ட நாளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.திருப்போரூர் தாலுகாவில் எட்டு லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ளனர்; மூன்று லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
40 கி.மீ.,
தவிர 50 ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள், ஆறு வருவாய் குறு வட்டங்கள் உள்ளன; ஒரு பேரூராட்சியும் உள்ளது.எட்டு லட்சத்திற்கு மேல் இருசக்கர வாகனங்கள், ஆறு லட்சம் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் உள்ளன.
திருப்போரூர் தாலுகாவில் இருந்து 200க்கும் மேற்பட்டோர், ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், தடையில்லா சான்று, கனரக வாகன உரிமம் போன்றவற்றை பெற, 40 கி.மீ., உள்ள செங்கல்பட்டு அடுத்த பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
தாமதம்
பொதுமக்களுக்கு போக்குவரத்து செலவு, கால விரையம், உடல் சோர்வு மற்றும் விபத்து போன்றவற்றை ஏற்படுத்துகிறது. தவிர, துாரம் அதிகமாக இருப்பதால், சேவை பெறுவதில் தாமதமாகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் ஒன்றியம் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒன்றியமாக இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
பொதுமக்களின் நலன் கருதியும், போக்குவரத்து விதி மீறல்களை தடுத்து விபத்துகளை தவிர்க்கவும், திருப்போரூர் தாலுகாவில் மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு பாரபட்சம்
பரனுாரில் இருந்து 12 கி.மீ., மட்டுமே உள்ள திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு, 'யூனிட்' அலுவலகமாக மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கி.மீ., திருப்போரூர் தாலுகாவிற்கு மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் அமைக்காமல், அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.