போலீசாருக்கான சர்வதேச தடகள போட்டிஅண்ணா நகர் பெண் போலீஸ் சாதனை

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை, போலீசாருக்கான சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில், மூன்று தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்று சாதனை படைத்த, சென்னை அண்ணா நகர் பெண் போலீசுக்கு பாராட்டு குவிகிறது.நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டேம் நகரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கடந்த ஜூலை 22 முதல் 31ம் தேதி வரை நடந்தன.இதில் தடகளப் போட்டியில், தமிழக காவல்
போலீசாருக்கான சர்வதேச தடகள போட்டிஅண்ணா நகர் பெண் போலீஸ் சாதனை

சென்னை, போலீசாருக்கான சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில், மூன்று தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்று சாதனை படைத்த, சென்னை அண்ணா நகர் பெண் போலீசுக்கு பாராட்டு குவிகிறது.நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டேம் நகரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கடந்த ஜூலை 22 முதல் 31ம் தேதி வரை நடந்தன.இதில் தடகளப் போட்டியில், தமிழக காவல் துறை எஸ்.பி., மயில்வாகனம் தலைமையில் 12 வீரர் - வீராங்கனையர் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.போட்டியில் தமிழக வீரர்கள் 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என, மொத்தம் 33 பதக்கங்களை வென்று அசத்தினர். பதக்கங்களை வென்ற காவல் துறையினருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.பதக்கம் வென்றவர்களில், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை போலீஸ்காரராக பணியாற்றும் பிரமிளா, 37; திருமணமாகாதவர்.இவர் 100, 400 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் மூன்று தங்கம்; 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் 'ரிலே' பிரிவில் இரண்டு வெள்ளி என, மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.இது குறித்து பிரமிளா கூறியதாவது:சென்னை, ஷெனாய் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். பள்ளிப் பருவத்தில் இருந்து தடகள விளையாட்டில் ஆர்வமும் அதிகம். காவல் துறையில் 2005ல் பணியில் சேர்ந்து, தற்போது அண்ணா நகரில் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறேன்.இதுவரை ஏராளமான மாநில மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்துள்ளேன். காவல் துறையில் சேர்ந்து இரண்டாவது முறையாக, போலீசாருக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளேன்.கடந்த 2019ல், சீனாவில் நடந்த சர்வதேச போட்டியில், ஒரு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றேன். இந்தாண்டு, மூன்று தங்கம் உட்பட, ஐந்து பதக்கங்களை வென்றுள்ளேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இன்ஸ்பெக்டர் உட்பட சக போலீசார் மற்றும் நண்பர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றி.தமிழக அரசு விளையாட்டு போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப் போல போலீசாருக்கு அரசு முன்னுரிமை அளித்து, நிதியுதவி செய்ய முன்வர வேண்டும். அரசு உதவினால், மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை சேர்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X