நீண்ட தூரத்தை இன்னும் கடக்க வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை:''வரும் 2047ல் சுதந்திரத்தின் நுாற்றாண்டை கொண்டாடும் போது, உலகத்திற்கே நம் நாடு தலைமையாக இருக்கும்,'' என்று, வேல்ஸ் பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி பேசினார்.சென்னை, பல்லாவரம் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின், 12வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நடந்தது. பல்கலை வேந்தர் ஐசரி கே.கணேஷ் தலைமை வகித்தார். துணை வேந்தர்
நீண்ட தூரத்தை இன்னும் கடக்க வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு

சென்னை:''வரும் 2047ல் சுதந்திரத்தின் நுாற்றாண்டை கொண்டாடும் போது, உலகத்திற்கே நம் நாடு தலைமையாக இருக்கும்,'' என்று, வேல்ஸ் பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி பேசினார்.
சென்னை, பல்லாவரம் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின், 12வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நடந்தது. பல்கலை வேந்தர் ஐசரி கே.கணேஷ் தலைமை வகித்தார். துணை வேந்தர் ஸ்ரீமன்நாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:வரும் 2047ம் ஆண்டில், சுதந்திரத்தின் நுாற்றாண்டை கொண்டாடும்போது, உலகத்திற்கே நம் நாடு தலைமையாக இருக்கும். அப்போது, இன்று பட்டம் பெற்ற உங்களை போன்ற மாணவர்களின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும்.கனவுகளை அடைய, கடுமையாக உழைக்க வேண்டும்.
ஒரு காலத்தில், உணவு பற்றாக்குறை அதிகமாக இருந்தது.தற்போது, நாம் அதை கடந்து விட்டோம். இருப்பினும், பல நீண்ட துாரத்தை கடக்க வேண்டும். பசி மற்றும் நோய்களால் வாடும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் முன்னேற்ற வேண்டும். நாட்டின், 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 'வீடுகள் தோறும் தேசியக் கொடி' எனும் நிகழ்வை மக்கள் கொண்டாடி வருகின்றனர். நீங்கள் யார் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
நாட்டின் சேவை, உங்களிடம் இருந்து தான் முதலில் துவங்குகிறது. தனி மனித சாதனைகள் அனைத்தும் சேர்ந்து, நம் நாட்டை உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லும். இவ்வாறு கவர்னர் பேசினார்.
நிகழ்ச்சியில், பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் அஜித்குமார் மொஹந்தி, திரைப்பட இயக்குனர் ஷங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, 'ராடிசன் புளூ' குழும தலைவர் விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலையில் பயின்ற, ௪,829 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பல்கலைக் கழக இணை வேந்தர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் கல்விக் குழும துணைத் தலைவர் பிரீத்தா கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X