அகஸ்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
அச்சிறுப்பாக்கம்:அனந்தமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது.அச்சிறுப்பாக்கம் அடுத்த, அனந்தமங்கலம் கிராமத்தில் 920 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது.பழமையான இக்ககோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோவில் அறங்காவலர், திருப்பணி குழுவினர், கிராம மக்கள் முடிவு
அகஸ்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

அச்சிறுப்பாக்கம்:அனந்தமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது.

அச்சிறுப்பாக்கம் அடுத்த, அனந்தமங்கலம் கிராமத்தில் 920 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது.பழமையான இக்ககோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோவில் அறங்காவலர், திருப்பணி குழுவினர், கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, கோவிலில் உள்ள அனந்தசயன பெருமாள், ஈசன் சன்னிதி புனரமைப்பு பணிகள் முடிந்து, ஜூன் 16ல் கும்பாபிஷேகம் நடந்தது.பின், 48 நாட்கள் முடிந்து, மண்டலாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. அகவன் அறக்கட்டளை சார்பாக, பக்தி இசை பாடல் கச்சேரி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X