பி.எஸ்.என்.எல்., ஒயர் திருட்டுபுளியந்தோப்பில் இருவர் கைது

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை, :பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு சொந்தமான காப்பர் ஒயர் திருடிய வழக்கில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., பெரு வாரியான வாடிக்கையாளர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, லேண்ட் லைன் சேவை வழங்கி வருகிறது. புளியந்தோப்பு பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கான
பி.எஸ்.என்.எல்., ஒயர் திருட்டுபுளியந்தோப்பில் இருவர் கைது

சென்னை, :பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு சொந்தமான காப்பர் ஒயர் திருடிய வழக்கில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., பெரு வாரியான வாடிக்கையாளர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, லேண்ட் லைன் சேவை வழங்கி வருகிறது. புளியந்தோப்பு பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் நடந்த போது, பி.எஸ்.என்.எல்., ஒயர்கள் வெளியில் கிடந்தன. காப்பர் ஒயர் என்பதால், 15 மீட்டருக்கு மேல் துண்டித்து திருடிச் சென்றனர்.இதே போல, மார்ச் மாதம் 35 மீட்டர் ஒயர் திருடப்பட்டது. அப்போதும், புளியந்தோப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில், பி.எஸ்.என்.எல்., ஒயர் திருட்டில் மர்ம நபர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக, புளியந்தோப்பு போலீசில் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் பல முறை புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரின் படி, புளியந்தோப்பைச் சேர்ந்த அருள், 36; ஸ்ரீதர், 21, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைத்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X