35 ஊராட்சி தலைவர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 35 ஊராட்சி மன்ற தலைவர்கள், அக்கட்சியில் இணைந்தனர்.இதுகுறித்து, அண்ணாமலை அறிக்கை:கடலுார் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு, ஜூலை 4ல் நடத்திய கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரச்னைகள் அனைத்திற்கும், தி.மு.க., அரசின் இயந்திரங்களில்

சென்னை:சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 35 ஊராட்சி மன்ற தலைவர்கள், அக்கட்சியில் இணைந்தனர்.
இதுகுறித்து, அண்ணாமலை அறிக்கை:கடலுார் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு, ஜூலை 4ல் நடத்திய கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரச்னைகள் அனைத்திற்கும், தி.மு.க., அரசின் இயந்திரங்களில் இருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு தான் காரணம்.
நிதியை விடுவிக்காததால், கடலுாரில் பல ஊராட்சி மன்றங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. தி.மு.க., அரசு, அந்த ஊராட்சிகளுக்கு அளிக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள, தமிழக பா.ஜ., பக்க பலமாக இருக்கும். பா.ஜ.,வில் இணைந்திருக்கும், 35 ஊராட்சி மன்ற தலை வர்களுக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X