பெண் இன்ஸ்.,சுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
அம்பத்துார் :புகார் தொடர்பான வாக்குவாதத்தில், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை மிரட்டியவரை, போலீசார் தேடுகின்றனர்.சென்னை அம்பத்துார், கள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் கபிலர், 58; மின் வாரிய ஊழியர். அவரது மகன் நெப்போலியன், 36; அவரது மனைவி மேனகா, 29; அவர், இரண்டு ஆண்டுக்கு முன் கணவர் மீது அம்பத்துார் மகளிர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.இந்த

அம்பத்துார் :புகார் தொடர்பான வாக்குவாதத்தில், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை மிரட்டியவரை, போலீசார் தேடுகின்றனர்.சென்னை அம்பத்துார், கள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் கபிலர், 58; மின் வாரிய ஊழியர். அவரது மகன் நெப்போலியன், 36; அவரது மனைவி மேனகா, 29; அவர், இரண்டு ஆண்டுக்கு முன் கணவர் மீது அம்பத்துார் மகளிர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.இந்த நிலையில், அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென, அம்பத்துார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அம்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, நேற்று முன் தினம், நெப்போலியன் மற்றும் அவரது பெற்றோரை, மொபைல் போன் வாயிலாக, விசாரணைக்கு அழைத்தார்.அப்போது பேசிய நெப்போலியனின் தந்தை கபிலர், தன் மகன் நெப்போலியன் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என, இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து, நீதிமன்ற உத்தரவின்படி தன்னை பணி செய்ய விடாமல் மிரட்டிய கபிலர் மீது, அம்பத்துார் போலீசில், இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X