நுாதன முறையில் பணம் பறித்ததிருடனை தப்ப விட்ட போலீஸ்

Added : ஆக 05, 2022 | |
Advertisement
மதுரவாயல்:உணவு 'டெலிவிரி' ஊழியர்களிடம் நுாதனமாக பணம் பறித்த வழக்கில் சிக்கிய சைபர் கிரைம் திருடனை, போலீசார் கைது செய்யாமல் வழியனுப்பி உள்ளனர்.சென்னை, கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகளில் தனியார் உணவு 'டெலிவரி' நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்களிடம், அவர்களது நிறுவனம் அளிக்கும் பெட்ரோல் அலவன்ஸ் தொகை 2,௦௦௦ ரூபாயை, முன்னதாக வாங்கித் தருவதாக, ஒருவர்

மதுரவாயல்:உணவு 'டெலிவிரி' ஊழியர்களிடம் நுாதனமாக பணம் பறித்த வழக்கில் சிக்கிய சைபர் கிரைம் திருடனை, போலீசார் கைது செய்யாமல் வழியனுப்பி உள்ளனர்.சென்னை, கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகளில் தனியார் உணவு 'டெலிவரி' நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்களிடம், அவர்களது நிறுவனம் அளிக்கும் பெட்ரோல் அலவன்ஸ் தொகை 2,௦௦௦ ரூபாயை, முன்னதாக வாங்கித் தருவதாக, ஒருவர் கூறியுள்ளார்.இதை நம்பிய சில ஊழியர்களுக்கு, சில நாட்களுக்கு முன், 'ரிங்' என்ற 'ஆப்' வாயிலாக, அவர்களின் மொபைல்போனில் பணம் பெற்றுக் கொடுத்துள்ளார். கமிஷனாக, ௧,௦௦௦ ரூபாய் வாங்கி உள்ளார்.அவர் சென்றதும், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் மொபைல் போனுக்கு, 2,௦௦௦ ரூபாய் கடன் வாங்கியதாக, 'ரிங் ஆப்'பில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள், அந்த நபரை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம், இதே போல் வேறொரு ஊழியரை ஏமாற்றும் போது சிக்கியுள்ளார். தர்ம அடி கொடுத்து விசாரித்ததில், அவர் பெரம்பூர் பகுதியை சேர்ந்த கார்த்தி, 24, என தெரிந்தது.அவரை, மதுரவாயல் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள், எல்லை பிரச்னையில், கோயம்பேடு காவல் நிலையத்துக்கு அனுப்பினர். அங்கு எதுவும் விசாரிக்காமல், கார்த்தியின் முகவரியை மட்டும் வாங்கிக் கொண்டு, போலீசார் வழியனுப்பினர்.இதனால், உணவு டெலிவரி ஊழியர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X