விவசாய நிலங்களில் தோட்டக்கலை ஆய்வு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
ஊட்டி:நீலகிரியில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.நீலகிரியில், தென்மேற்கு பருவமழையால், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார்பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்தது.இதில், சாகுபடி செய்யப்பட்ட மலை காய்கறி தோட்டங்கள் மழைக்கு பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தோட்டக்கலை மூலம் பயிர் சாகுபடி பாதிப்பு குறித்து

ஊட்டி:நீலகிரியில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.நீலகிரியில், தென்மேற்கு பருவமழையால், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார்பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்தது.இதில், சாகுபடி செய்யப்பட்ட மலை காய்கறி தோட்டங்கள் மழைக்கு பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தோட்டக்கலை மூலம் பயிர் சாகுபடி பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டது.தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''மழையால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோட்டக்கலை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 14 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையில், 5 ஏக்கர் அளவுக்கு மலை காய்கறி தோட்டங்கள் சேதமாகி உள்ளன. அந்தந்த பகுதி தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அரசுக்கு அனுப்பி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X