வங்கி கணக்கில் ரூ.1.50 லட்சம்: மூதாட்டி மீது வழக்கு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
சேலம்:மூதாட்டிக்கு இழப்பீடு வழங்கிய பின், மீண்டும் தவறுதலாக, 1.50 லட்சம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அந்த தொகையை அவர் தர மறுத்ததால், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சேலம், தலைமை குற்றவியல் நீதிமன்ற, 'செராஸ்தார்' செந்தில்குமார், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:சேலம் மாவட்டம், தாரமங்கலம், பாரக்கல்லுாரை சேர்ந்த சுசீலா, 76,

சேலம்:மூதாட்டிக்கு இழப்பீடு வழங்கிய பின், மீண்டும் தவறுதலாக, 1.50 லட்சம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அந்த தொகையை அவர் தர மறுத்ததால், மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், தலைமை குற்றவியல் நீதிமன்ற, 'செராஸ்தார்' செந்தில்குமார், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:சேலம் மாவட்டம், தாரமங்கலம், பாரக்கல்லுாரை சேர்ந்த சுசீலா, 76, என்பவருக்கு, மோட்டார் வாகன வழக்கில் இழப்பீடாக, 1.50 லட்சம் ரூபாய், 2016ல் வழங்கப் பட்டது.நீதிமன்ற கணக்கிலிருந்து மீண்டும் அவருக்கு தவறுதலாக, 1.50 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது.

அவரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட தொகையை தர மறுக்கிறார்.அந்த பணத்தை முழுமையாககொடுக்க முடியாவிட்டாலும், தவணைகளாக செலுத்த, நீதிமன்ற ஊழியர்கள் வாய்ப்பு வழங்கினர். எனினும், அவர் கொடுக்க மறுக்கிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மூதாட்டி சுசீலா மீது மோசடி வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X