பெங்களூரு-லால்பாக் பூங்காவில், மலர்க்கண்காட்சி நடப்பதால், வரும் 15 வரை, பெங்களூரின் பல இடங்களில், வாகன நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறை, மைசூரு கலாசங்கம் ஒருங்கிணைப்பில், ஆகஸ்ட் 5 முதல் 15 வரை, பெங்களூரின் லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கிறது.பொது மக்கள், சுற்றுலா பயணியர், உள்நாட்டு, வெளிநாட்டினர், சிறு பிள்ளைகள் என, ஏழெட்டு லட்சம் பேர் மலர் கண்காட்சிக்கு வருகை தரும் வாய்ப்புள்ளது.வாகன போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த வில்சன் கார்டன் போலீசார் தேவையான வசதி செய்துள்ளனர்.மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில், நகரின் சில பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொது மக்கள் சொந்த வாகனத்தை தவிர்த்து, பி.எம்.டி.சி., மெட்ரோ, வாடகைக் கார்களை பயன்படுத்தும்படி, போலீசார் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:வாகனம் நிறுத்தும் இடங்கள்: மரிகவுடா சாலை, அல் அமீன் கல்லுாரி வளாகத்தில், இருசக்கர வாகனங்களையும்; கே.எச்.சாலை, சாந்தி நகர், பி.எம்.டி.சி., டிப்போக்களில் நான்கு சக்கர வாகனங்களையும்; ஜெ.சி.சாலை, பெங்களூரு மாநகராட்சி பார்க்கிங் பகுதிகள், ஹாப்காம்ஸ்களில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
வாகன தடை பகுதிகள்: லால்பாக் தலைமை நுழைவு வாசலிலிருந்து, நிமான்ஸ் வரையிலான சாலையின் இரண்டு ஓரங்கள்; கே.எச்., சதுக்கத்திலிருந்து, சாந்திநகர் சந்திப்பு வரையிலான சாலையின் இரண்டு ஓரங்கள்; லால்பாக் சாலை, சுப்பையா சதுக்கத்திலிருந்து, லால்பாக் தலைமை நுழைவு வாயில் வரை.சித்தையா சாலை, ஊர்வசி ஜங்ஷனில் இருந்து, வில்சன் கார்டன் 12 வது கிராஸ் வரை சாலையின் இரண்டு ஓரங்கள்; பி.டி.எஸ்., சாலையின் இரண்டு ஓரங்களிலும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.