நிதி நிறுவனங்கள் நெருக்கடி; தனியார் பள்ளிகள் தவிப்பு

Added : ஆக 05, 2022 | |
Advertisement
பெங்களூரு,-கொரோனா நேரத்தில் அளித்த கடனை திருப்பிக் கேட்டு தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களை மிரட்டுவதுடன், தாக்குகின்றன. இதில் அரசு தலையிட்டு, பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதம்:கொரோனா தொற்று தீவிரமாக இருந்த போது, பொருளாதார நெருக்கடி

பெங்களூரு,-கொரோனா நேரத்தில் அளித்த கடனை திருப்பிக் கேட்டு தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களை மிரட்டுவதுடன், தாக்குகின்றன.

இதில் அரசு தலையிட்டு, பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதம்:கொரோனா தொற்று தீவிரமாக இருந்த போது, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதை சமாளிக்க தனியார் பள்ளிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம், அதிக வட்டிக்கு கடன் வாங்கின. பள்ளிகள் திறக்கப்பட்டது என்றாலும், லாபம் கிடைக்கவில்லை. அதிக வட்டி செலுத்துவது கஷ்டமாக உள்ளது.ஆனால் நிதி நிறுவனத்தினர், பள்ளி உரிமையாளர்களை இம்சித்து, கடனை வசூலிக்கின்றனர். மிரட்டுவது, தாக்குவது என அராஜகமாக நடக்கின்றனர். மாநில அரசு உடனடியாக பேச்சு நடத்தி, கடனை அடைக்க கால அவகாசம் பெற்றுத்தர வேண்டும்.கொரோனாவால், இரண்டு ஆண்டாக அனைத்து தொழில்களும் நஷ்டம் அடைந்துள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்கின. நிதி நிறுவனங்கள் கர்நாடகாவில் இருந்தாலும், கடனை திருப்பிக்கேட்டு வெளி மாநிலங்களில் புகார் பதிவு செய்து, நோட்டீஸ் அனுப்புகின்றனர்.பள்ளிக்கு பூட்டு போடுவது, பள்ளி உரிமையாளர்களின் சொத்துகளை ஜப்தி செய்வது, குண்டர்களை அனுப்பி மிரட்டுவது போன்ற செயல்களை செய்கின்றனர். இது குறித்து பல பள்ளிகளிலிருந்து, புகார் வருகிறது. இதுபோன்ற நிதி நிறுவனங்களுக்கு, அரசு கடிவாளம் போட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X